அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை....!
அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவர் சாருவ லியனகே சுனில் என்பவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 வயதுச் சிறுமி, நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனாமியினால் காணாமற்சென்ற தனது தாயின் வருடாந்த மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சென்ற டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி தனது சொந்தக் கிராமத்துக்கு வந்திருந்தபோதே இது நடந்துள்ளது.
அக்குரஸ்ங பிரதேச சபையின் தலைவரான 48 வயதுடைய சாருவ லியனகே சுனில் 2012 மே மாதம் 23 ஆம் திகதி - 2012 மே மாதம் 30 ஆம் திகதி காலப்பகுதியில் 14 வயதுச் சிறுமியை அக்குரஸ்ஸவிலுள்ள அவருக்குச் சொந்தமான இடமொன்றில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்ததாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 2012 ஜூலை மாதம் 04 ஆம் திகதி லியனகே சுனில் என்பவர் கைது செய்யப்பட்டார்.
எதுஎவ்வாறாயினும், சிறைச்சாலையிலிருந்த பிரதேச சபைத் தலைவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment