யாழ்.இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கே ஆயுதக் குழுக்களை இயக்குகின்றார்- ரணில்
யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே இரகசிய ஆயுதக்குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
வடபகுதிக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி.வடக்கில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால் இராணுவப் புலனாய்வுப் பிரிவை கொண்டு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
எனது இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கருதினாலே தனது பக்க நியாயங்களை இராணுவத்தளபதி எழுத்து மூலம் தனக்கு அறியத்தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment