இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம்- ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானம்
இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒஸ்ரியா, அயர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெய்ன், சுவிற்சர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, மொன்ரினிக்ரோ, போலந்து, ருமேனியா ஆகிய 10 நாடுகள், வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment