ஒபாமாவிடம் விருது வாங்கிய இந்தியர்!!
இந்தியாவைச் சேர்ந்த ரங்கசாமி சிறினிவாசன் எனும் விஞ்ஞானிக்குச் சமீபத்தில் அமெரிக்காவின் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புதுமைக்கான தேசிய விருது கிடைக்கப் பெற்றுள்ளது.இவருடன் சேர்த்து இன்னமும் 22 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருதையளித்துக் கௌரவித்தவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
82 வயதாகும் சிறினிவாசன் IBM இன் தோமஸ் ஜே வத்சன் ஆய்வு கூடத்தில் தனது நண்பரான சாமுவேல் புளூமான்ட் வைனே உடன் இணைந்து மேற்கொண்ட புதிய கண்டு பிடிப்புக்காகவே இவ்விருவருக்கும் ஒபாமா கையால் இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பு மனித மற்றும் விலங்குகளின் திசுக்களில் உள்ள லேசர் ஒளிக் கதிர் வீச்சுப் பற்றியதாகும்.
இக் கண்டுபிடிப்பின் மூலம் கண் பார்வை இழந்தவர்களுக்கு பார்வையைத் திரும்ப அளிக்கும் சிகிச்சைகளில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படவுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்விழாவில் அதிபர் ஒபாமா உரையாற்றிய போது விஞ்ஞானத்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் புதிய கண்டுபிடிப்புக்களும் அதை விளைவிக்கும் நல்ல சிந்தனைகளும் எங்கிருந்து வந்தாலும் அதை நாம் வரவேற்போம் எனக் கூறினார்.
தற்போது இவ்விஞ்ஞானிக்குக் கிடைத்திருக்கும் இவ்விருது அமெரிக்க அரசாங்கத்தால் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், மற்றும் கண்டு பிடிப்பாளர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் உயரிய விருதாகும். ரங்கசாமி சிறினிவாசன் தனது விஞ்ஞானத்துக்கான Bachelors மற்றும் mastering பட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்து பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment