நவநீதம் பிள்ளையின் வாதம் பக்க சார்பானது என அமெரிக்க அரசு உணர்கின்றது.-தம்பிமுத்து
நவநீதம் பிள்ளையின் கருத்துக்கள் பக்க சார்பானது என்பதை அமெரிக்க அரசாங்கம் உணர்ந்து கொண்டது . எனவேதான் அவரை முழுமனதோடு ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு தேர்வு செய்யவில்லை என்பது தற்போது தெளிவாக நிரூபணமாகியுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்டட செயலாளர் அருண் தம்பிமுத்து டெய்லிமிரர் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அவர் எப்பொழுதும் கருப்பு வெள்ளை கண்ணோட்டத்திலேயே இலங்கையை விமர்சித்து வருவதாகவும் நன்கு உணர முடிகின்றது . தமிழர் என்ற ரீதியில் கடந்த கால கசப்பான அனுபவங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு அவரது விமர்சனங்கள் பக்க சார்பாக ஜோடிக்கப்பட்டு , ஒப்பீட்டு முறையில் அமையப்பெற்றுள்ளதாக தம்பிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சில சக்திகள் செயல்பட்டு வருவதை உணர முடிகின்றது . ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூற்றுக்களின் படி நாம் இனியும் பொறுமை காத்திருப்போமேயானால் எதிர்வரும் காலங்களில் நல்ல உணவு , நீர் மற்றும் நீதித்தன்மை என்பன வற்றுக்கும் எதிர்பார்ப்புடன் கடவுளை பிரார்த்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட கூடும் என தம்பிமுத்துவின் செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எரியும் தீயில் இனவாத தேசியத்தினை சார்ந்தே அரசியல் பிழைப்பினை கொண்டிருப்பதாக அருந்தம்பிமுத்து தமது செவ்வியில் கடுமையாக சாடியிருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கின் அதிகார பகிர்வினை மாத்திரம் அவர்கள் மந்திரமாக உச்சாடனம் செய்து வருகின்றனரே ஒழிய வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தொடர்பில அவர்கள் உண்மையான அக்கறை கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment