Thursday, February 14, 2013

இனி மீன் விலையும் குறுஞ்செய்தி மூலம்....


மீன் பிடிக் கூட்டுத்தாபனத்தின் மூலம் தினந்தோறும் அறியத்தரப்படுகின்ற மீன்களின் விலை பற்றிய விபரங்களை இனி குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளக்கூடிய வசதியை நுகர்வோர் பெறக்கூடிய முறையில் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமுகவர் நிலையம் (ICTA குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் மீன்களை நுகர்வோர் அன்றாடம் சந்தையில் மீன்கள் என்ன விலை போகின்றன என்பதை வெகு சீக்கிரமாக அறிந்துகொள்ள முடியும் எனவும் நுகர்வோரின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் எனவும் அந்த முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது. Cfc இடைவெளி prc என தட்டச்சிட்டு மீன் வகை மற்றும் வியாபார நிலையம் அமைந்துள்ள பிரதேசம் என்பவற்றைத் தட்டச்சிட்டு அனுப்புவதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரச தகவல் நிலையத்திற்கு (1919) என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியும் தகவல் பெற்றுக் கொள்ள முடியும் என நிலையம் அறிவித்துள்ளது.

எண்டோயிட் எனும் கையடக்கத் தொலைபேசிக்குரிய மென்பொருளை நிறுவிக்கொள்வதன் மூலமும் இந்தச் சேவையை இலவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தேயிலை ஏல விற்பனை, தேயிலைக் கொழுந்தின் விலை, மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தின் அளவு, புகையிரத நேர அட்டவணை, விண்ணப்பித்த ஆள் அடையாள அட்டை தயார் நிலையில் உள்ளதா இல்லையா என்ற விபரங்கள் குறுஞ்செய்தி மூலம் அறிந்துகொள்ளக் கூடிய வசதிகளைப் பொதுமக்கள் பெறக்கூடியதாக உள்ளன என முகவர் நிலையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி மோதரையிலுள்ள இலங்கை மீன்பிடித் துறைமுக அதிகார சபையில் இந்தச் சேவை பற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com