உடை மாற்றவும் இடமில்லை என காலியில் தாதியர் ஆர்ப்பாட்டம்!
காலி மகமோதர வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தாதியர்கள் சங்கம் இன்று காலை, சேவையில் ஈடுபடாது வைத்தியசாலை முன்றலில் ஒன்றுகூடினர்.
அரச சேவையிலுள்ள ஐக்கிய தாதியர் சங்கத்தின் தென்மாகாண அமைப்பாளர் டீ.பொரலெஸ்ஸ குறிப்பிடும்போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தில் தாதியருக்கு உடை மாற்றும் வசதிகூட இல்லை என்றும் அங்கு அவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வைத்தியசாலை பணிப்பாளர் பிரியானி சேனாதீர குறிப்பிடும்போது, புதிய கட்டடத்தில் தாதியருக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment