ஒசாமாவை கொன்ற எனக்கு ஓய்வூதியம் கூட இல்லை! ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ வீரர் ஊடகங்களுக்கு பரபரப்பு தகவல்.
அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்த ஒஸாமா பின் லாடனை கொலை செய்த, அமெரிக்க ராணுவ உத்தியோகத்தருக்கு அரசினால் எதுவித உதவிகளும் வழங்கப்படவில்லையென, அமெரிக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ உத்தியோகத்தர் ஒருவர், தமது பெயரை குறிப்பிடாது, ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் நேரடியாகவே, ஒசாமா பின் லாடனை சுட்டுககொன்றுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அர்ப்பணிப்பு செய்த தான், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசினால் எதுவித உதவிகளும் புரியவில்லையென்றும், அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வூதிய சம்பளம் கூட, தனக்கு கிடைப்பதில்லையென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
பலர், நாட்டை பாதுகாப்பதற்கு பதிலாக, தமது தொழிலை பாதுகாக்க முயற்சித்ததாக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அண்மையில் தெரிவித்தார். ஜனாதிபதி ஒபாமாவின் அந்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், சம்பவம் தொடர்பில் கவலையடைவதாகவும், ராணுவ உத்தியோகத்தர், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அமெரிக்காவின் ஆயுத கட்டுப்பாட்டு செயற்பாடுகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக, அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிக்காகோவில் அமைந்துள்ள ஒபாமாவின் இல்லத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் 15 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 8 பேர் கைது செய்யபபட்டனர். இந்த சிறுமி, ஒபாமா இரண்டாவது தடவையாக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்றவர் என்பது, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment