இரணைமடு குள நீரை திசை திருப்ப எடுக்கும் முயற்சியை பாராட்டிய யாழ்.முதல்வர்
யாழ்ப்பாணத்தில் பெருகிவரும் மக்கள் தொகையினால் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்சனை காணப்படுகிறது இதனால் யாழ்ப்பாணத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரும் புதிய நீர்பாசன திட்டம் ஒன்றை நீர்பாசன திணைக்களம் ஆரம்பித்துள்ளது பாராட்டுக்குரியது என யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் இன்று (08.02.2013) யாழ் மாநகரசபை மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்ற இரணைமடு குள நீரை வட பகுதிக்கு கொண்டுவருவது தொடர்பான ஆய்வு மாநாட்டிலேயே முதல்வர் இனை குறிப்பிட்டார்.
தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரி்த்துக்கொண்டு செல்வதனால் யாழ் குடாநாட்டு மக்களின் குடிநீர் தேவை அதிகரித்துள்ளால் பெருமளவான நிலத்தடி நீர் தினமும் வெளியேற்றப்படுவதால் கிணறு குளம் ஏரி பேன்றவற்றில் நீர் மாசடைதல் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை தற்போது இரணைமடுக் குளத்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இனை ஒரளவு என்றாலும் கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டதுடன் இந்த திட்டத்தை துரிதகதியில் முடித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த உத்தியோகத்தர்களை கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment