புலம்பெயர் இலங்கையர்களால் அவுஸ்ரேலியாவில் உருவானது தமிழ் கட்சி!
அவுஸ்ரேலியாவிற்குச் சென்று குடியேறிய இலங்கையர்கள் அரசியல் கட்சியொன்றை ஸ்தாபித்துள்ளனர். அவுஸ்ரேலிய எழுச்சி கட்சி என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சியில் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதுடன் இந்த கட்சி எதிர்வரும் பிராந்திய தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த தீர்மானித்துள்ளது இந்த கட்சியை இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட டெனியல் நல்லையா என்பவரினால் அவுஸ்ரேலிய எழுச்சிக் கட்சி என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிற்குள் நுழைபவர்கள் அந்த நாட்டிற்கு விஸ்வாசமான முறையில் தம்மை மேம்படுத்துவதுடன் அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முக்கிய கொள்கையை இந்த புதிய கட்சி கொண்டுள்ளதாகத் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment