பூமியைத் தாக்க வருகிறது சூரியப் புயல்!
சூரியனில் இருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என லண்டன் "ராயல் அகடமி ஆப் இன்ஜினியரிங்´ விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர் இதனால் செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரியனால் உமிழப்படும் துகள்கள் ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது என்றும், தொன் கணக்கில் உமிழப்படும் இந்தத் துகள்கள், மணிக்கு 16 இலட்சம் கிலோ மீற்றர் வேகத்துடன் பூமியை நோக்கி வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதுடன், இந்த புயல் தோன்றுவதற்கு 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், 1859ஆம் ஆண்டு பூமியை தாக்கியுள்ளதாகவும், கனடாவில், 1989ஆம் ஆண்டு சிறிய அளவிலான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment