போலி கிருமிநாசினி தயாரிக்கும் தொழிற்சாலை சுற்றிவளைப்பு
தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்காக பயன்படுத்தப்படும் அதிக விலை கொண்ட கிருமிநாசினிகள், போலியான முறையில் தயாரிக்கப்படும் தொழிற்சாலையொன்றே, இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் கொட்டகலை, யொஷிடா தோட்டத்தில், மிக நீண்ட நாட்களாக இத் தொழிற்சாலை இயங்கி வந்ததாக, நுவரெலிய மாவட்ட நுகர்வோர் சேவை மத்திய நிலையத்தின் இணைப்பதிகாரி ஐ. விமலஸிறி தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சாலை சுற்றிளைக்கப்பட்டபோது, முற்றுகை மேற்கொள்ளப்பட்டபோது விற்பனைக்கெனத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினிகள் அடங்கிய பல பொதிகள் கைப்பற்றப்பட்டன. இப்போலி கிருமி நாசினித் தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment