ஜெனீவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளோர் பற்றிய விபரம் அடுத்த வாரம்
ஐநாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைப் பிரதிநிதிகளின் பெயர்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளன.
இம்மாதம் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 22 ஆம் திகதி ரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் பற்றிய விபரத்தைஅடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கூட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியும் தூதுவருமான ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment