ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குழுவினர் கொழும்பில் கைது
ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்டதாக சந்தேகத்தின் பேரில், கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், அவரது சகோதரரான இலங்கை கடற்படையில் பணியாற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அச்சிட்ட ஆயிரம் ரூபா நாணயத்தாளை வொயங்கொட பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மாற்ற முயற்சித்த போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதான சந்தேக நபர்களுடன் மேலும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment