கள்ள நோட்டைக் கொடுத்துவிட்டு பிக்கு மாயம் வலைவீசி தேடும் பொலிஸ்
அம்பாறை - இங்கினியாகல பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கான மீள் நிரப்பும் கடன் அட்டையை பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை கொடுத்து பௌத்த தேரர் ஒருவர் தம்மை ஏமாற்றிவிட்டதாக தொலைபேசிக் கட்டணங்களை மீள் நிரப்பும் தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் அவரை தேடிவருகின்றனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்படும் பொலிஸாரின் விசாரணையில், குறித்த சந்தேகநபர் அம்பாறையில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளதாகவும் இதனால் குறித்த சந்தேகநபர் விரைவில் கைது செய்யப்படுவார் என இங்கினியாகல பொலிஸார் தெரிவித்ததுள்னர்.
0 comments :
Post a Comment