யாழ் ஒளி ஜனாதிபதியால் திறப்பு (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று மாலை 5.00 மணியளவில் சிறப்புவிமானத்தில் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கைகொடுத்து வரவேற்றனர்.
ஜனாதிபதியுடன் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரியா, பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் வருகைதந்தனர். இன்று காலை 10.00 மணிக்கு சுன்னாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ் ஒளி மின்னூட்டல் நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து காலை 11.00 மணிக்கு யாழ்.ரில்கோ ஹோட்டலில் நடைபெறும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்குகொண்டதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு நயினாதீவு பதிய இறங்குதுறை மற்றும் அங்குசமய நிகழ்வுகளில் கலந்துகொள்ண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு ஒளியூட்டும், சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம், ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. யாழப்பாணத்திற்கு மின்சாரத்தை வழங்க, மின்சார சபை பொறுப்பேற்கும் செலவிலிருந்து வருடாந்தம் ஆயிரத்து 350 மில்லியன் ரூபாவை, இதனூடாக சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறைந்த செலவில் தொடர்ந்து மின்சார விநியேகத்தை பெற்றுக்கொடுப்பதற்கு, உத்துரு ஜனனி புதிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதுவரை யாழ்ப்பாணத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு, தனியார் துறையின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்திற்கென, 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சகல நிர்மாணப் பணிகளும், உள்ளுர் பொறியியலாளர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினூடாக, 176 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவற்றின் இயந்திரங்களை இயக்குவதற்கு, கரியெண்ணய் பயனபடுத்தப்படுவதில்லை. எரிபொருள் களஞ்சியப்படுத்தல், சுத்தீகரிப்பு, சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கான வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்கும் அதேநேரம், விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன், நட்புறவு ரீதியாக உரையாடினார். ஜனாதிபதியின் திடீர் விஜயத்தையிட்டு, மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், அவர்கள் மீது அரசாங்கம் செலுத்தும் அக்கறையையிட்டு, நன்றி தெரிவித்தனர். யாழ். விவசாயம் தொடர்பாக, ஜனாதிபதி, விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
1 comments :
நாட்டை அபிவிருத்தி செய்ய கூடிய ஒரே தலைவர் மகிந்த மட்டுமே , புலன் பெயர் தமிழர் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளார்கள்.
Post a Comment