நோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் ஒருவரால் வெள்ளையினப் பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி எனப்படும் நபரால் குத்திக்கொலை செய்யப்பட்ட இப்பெண்ணுடன் இணைந்து பல்வேறு வியாபராங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் நோர்வேயில் சுமார் 20 வீடுகள் மற்றும் ரெஸ்ருரண்டுகள் என கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளவராம்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயில் குடியேறிய இவரால் குறுகிய காலத்தினுள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களையும் சேர்க்க முடிந்தது என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண்ணுடன் குறித்த நபர் தகாத உறவுகளை வைத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment