யாழ்.சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு
பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதி வெற்றுக் காணியில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இவை வெற்றுக்காணியில் இருப்பதை அவதானித்த பொது மக்கள் வழங்கிய தகவலின்படியே சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரால் செலிழக்க வைக்கப்பட்டன.
குறித்த பகுதியானது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, அண்மையிலேயே மக்கள் மீள்குடியமர்விற்காக விடுதலை செய்யப்பட்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment