தமிழர்களின் பூர்வீகக் காணிகளில் முஸ்லீம்களை சத்தமில்லாமல் குடியேற்றுகிறார் அமைச்சர் ரிசாத்- போராட்ட களத்தில் பெண்கள்
இதுவரையில் 57ஆயிரம் பேர் குடியேறினர். மேலும் 15 ஆயிரம் பேர் காத்திருப்பு.
வன்னியில் சிங்களவர்களால் பாரிய நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் வன்னியில் 57 ஆயிரம் முஸ்லீம்களை சத்தமில்லாமல் குடியேற்றியுள்ளார் அமைச்சர் ரிசாத் பதியூதீன்.வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிக்கின்றது. இராணுவ முகாம்களுக்காக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆனால் அமைச்சர் ரிசாத் பதியூதீன் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் ஆயிரம் ஆயிரமாக முஸ்லீம்களை தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றியுள்ளார்.
இதிலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா என சகல மாவட்டங்களிலும் முஸ்லீம்கள் வசிக்காத பூர்வீக இடங்களில் 57 ஆயிரம் முஸ்லீம்கள் இதுவரையில் குடியேற்றப்பட்டதோடு, இன்னமும் 15 ஆயிரம் முஸ்லீம்களை குடியேற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
இதற்காக காணிகளையும் அவர் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று அரசாங்கத்தோடு நின்று கொண்டிருக்கும் ஈ.பி.டி.பி யினால் கூட இதற்கு எதிராக அராங்க மட்டத்தில் ஒன்றையும் செய்ய முடியவில்லை.
இதனால் நாளுக்கு நாள் ரிசாத் பதியூதீனின் அதிகாரங்களும் அவரது சர்வதிகாரப் போக்குகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் நில அபகரிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண பெண்கள் அமைப்பு என்ற அமைப்பினால் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழர்களின் பக்கம் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உட்பட எந்த அரசியல் கட்சிகளாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது என்பதால் தான் எதிர்கால சந்ததியின் நிலங்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்ற களம் இறங்குகின்றனர் வடமாகாணப் பெண்கள் அமைப்பினர்.
0 comments :
Post a Comment