Wednesday, February 13, 2013

யாழ் அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் விநாயகமூர்த்தியார் மணி ஆட்டின கதை தெரியுமோ?

யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினம் யாழ். ரில்கோ மண்டபத்தில் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. இதில் வெளிவராத சுவாரிசியமான விடயம். கேள்விப்பட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். நிகழ்வில் பங்கேற்ற ஒரேயொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஐயாவிற்கு கூட்டம் நடைபெற்றபோது அவசரமாக இயற்கை அழைப்பு வந்துவிட்டது.

பாவம் மனுசனுக்கு என்ன அவசரமோ இடைநடுவில் எழுந்து சென்ற மனுசன் வோஷ் ரூம் எங்கே எண்டு விசாரிச்சு போனார். ஆனால் விஷயத்தை முடிச்ச பிறகு போன மாதிரியே திரும்பி வந்திருக்கலாம். எல்லாருக்கும் நடுவால வந்த மனுசன் டவுஸர் சிப்பை போட மறந்திட்டுது.

கூட்டத்தில இருந்து ஆம்பிளையள் நக்கல் சிரிப்பு சிரிக்க, பொம்பிளையள் முகத்தைப் பொத்த ஆபந்தவானனாய் வலி. வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயபாலசிங்கம் எழும்பிப்போய் ஐயாட்டை விசயத்தைச் சொல்லி சிப்பை பூட்டச்சொன்னார்.

இவ்வளவும் நடக்கேக்கை ஐயாண்டை கட்சியைச் சேர்ந்த வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன் பார்த்துக்கொண்டே இருந்தார். மற்ற ரீஎன்ஏ எம்பிமார் மாதிரி கதை விட்டுட்டு கூட்டத்திற்கு வராமல் ஐயா பங்குகொண்டது அவருக்கு கடுப்பு ஏத்தியிருக்க வேணும்.

இந்த நேரம் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேணும். உண்மையில ரீஎன்ஏ எம்பிமாருக்கு அழைப்பு அனுபப்பட்டு கதிரையும் ஒதுக்கப்பட்டே இருந்தது. ஆனால் அவை பங்குபற்றாததுக்கு காரணம் என்ன தெரியுமோ?

சனத்துக்கு ஒரு முகத்தையும், பின்பக்கத்தாலை ஜனாதிபதிக்கு ஒரு முகத்தையும் காட்டியே அரசியல் செய்பவர்கள் சரவணபவன், சுரேஷ் போன்றவர்கள். ஊடகங்கள் ஊடாகவும், சனத்திட்ட நேரடியாகவும் காட்டும் வீராவேசத்தை ஒரு பொதுக்கூட்டத்தில எப்படி ஜனாதிபதியிட்ட காட்டுறது? நாளைக்கு பிழைப்பு நடத்த வேண்டாமோ? கூட்டத்தில கலந்து கொண்டுவிட்டு பம்மிக்கொண்டு இருந்தாலும் நாளைக்கு சனத்திண்ட முகத்தில முழிக்க ஏலாது.

ஆனால் விநாயகமூர்த்தி ஐயா பிள்ளை குட்டி - பிச்சல் பிடுங்கல் இல்லாத மனுசன். கொழும்பிலோ வெளிநாட்டிலோ குடும்பமோ வியாபாரமோ நடத்தாத மனுசன். எண்டபடியால்தான் சிப் போடாமல் மனதில இருந்ததையும் திறந்து ஜனாதிபதிக்கு முன்னால கூட்டத்தில கதைச்சப் போட்டார் எண்டுதான் நினைக்க வேண்டியிருக்குது.


- ஆர். மோகன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com