ஐபிஎல் ஏலம் முடிவுகு வந்தது
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.மொத்தம் 37 வீரர்கள் புதிதாக ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். சுமார் 11.89 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இவர்கள் அனைவரும் வாங்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிலேய்ன் மெக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டுள்ளார். இலங்கை பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 725,000 அமெரிக்க டாலருக்கும், பந்துவீச்சாளர் கேன் ரிச்சார்ட்சன் 700,000 அமெரிக்க டாலருக்கும் புனே வாரியர்ஸால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (மும்பை இந்தியன்ஸாலும்), மைக்கெல் கிளார்க் (புனே வாரியர்ஸாலும்) வாங்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியார்களை விட தென் ஆபிரிக்க ஆல் ரவுண்டர் ஜோன் போதா, இந்தியாவின் ஆர்.பி சிங் ஆகியோரும் ஓரளவு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
யார் யார் எந்தெந்த அணிகளால் வாங்கப்பட்டனர் என்பதன் விபரம்
டெல்லி டேர்டெவில்ஸ் : ஜோன் போதா, ஜேஸி ரைடர், ஜீவன் மெண்டிஸ்
சென்னை சுப்பர் கிங்ஸ் : கிரிஸ்தோபர் மோரிஸ், டிரிக் நான்ஸ், பென் லாஃக்லின், அகிலா தனஞ்சயா, ஜேசன் ஹோல்டர்
பஞ்சாப் அணி : லூக் போமெஸ்பாச், மான்பிரீட் கோனி
மும்பை இந்தியன்ஸ் : கிளென் மெக்ஸ்வெல், ரிக்கி பாண்டிங், பிலிப் ஹாக்ஸ், நதன் கௌட்லர் நில், ஜேகப் ஓரம்
புனே வாரியர் : அபிஷேக் நாயர், மைக்கெல் கிளார்க், அஜந்த மெண்டிஸ், கேன் ரிச்சார்ட்ஸன்
ராஜஸ்தான் : ஜேம்ஸ் ஃபௌல்க்னெர், ஃபிடெல் எட்வார்ட், குசாஸ் ஜனித் பெரேரா
பெங்களூர் : ஆர்.பி.சிங், ஹென்ரிக்ஸ், ஜாதேவ் உனாத்கத், ரவி ராம்போல், பங்காஜ் சிங், டேனியல் கிரிஸ்டியன், கிரிஸ்தோபர் பார்ன்வெல்
ஹைதராபாத் சன் ரைஸஸ் : திசார பெரேரா, டரன் சாமி, சுதீப் தியாகி, நாதன் மெக்குலம், கிளிண்டன் மெக்கேய், குயிண்டன் தி கோக்
கொல்கத்தா : சசித்திரா சேனநாயக்க, ரியான் மெக்லேரன்
0 comments :
Post a Comment