முகேஷ் அம்பானி வீட்டுக்கு முதலிடம்
உலகில் உள்ள விலை மதிப்புமிக்க வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் அன்டில்லா என, பெயர் சூட்டப் பட்ட தெற்கு மும்பையில் 4,532 சதுர மீற்றர் பரப்பளவில் 27 மாடிகளைக் கொண்ட 5,350 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு முதலிடம் பிடித்துள்ளது.
இந்த வீடு உள்ள பகுதியில், ஒரு சதுர மீற்றர் நிலத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்படன் இங்கு முழு நேர பணியாளர்களாக 600 பேர் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்ததாக பிரான் சில் உள்ள வில்லா லியோ போல்டாஹ என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் உள்ள ஹதி பென்ட் ஹவுஸ் எனப்படும் கட்டடம், 1,070 கோடி ரூபாய் மதிப்புடன் மூன்றாம் இடத்தினையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment