மாங்குளம் வாகன விபத்தில் ஈ.பி.டி.பி பா.உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் படுகாயம்!
ஏ-9 வீதியில் மாங்குளம் சந்திக்கு அண்மையில் இன்று(04.02.2012) திங்கட்கிழமை மாலைநடைபெற்ற வாகன விபத்தில் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் படு காயமடைந்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற 65 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து விட்டு யாழ்ப்பாணம் நேக்கி திரும்பிக்கொண்டிருந்த யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் நேற்று மாலை 6.30 மணியளவில் இவர்கள் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகிக் விபத்துக்குள்ளானதில் அலன்ரின், அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்,வாகன சாரதி ஆகழயோர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டு யாழ் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment