Saturday, February 23, 2013

திருமணமானவர்களில் பாதிப்பேர் விவாகரத்துக்காக....!

‘இந்நாட்டு குடும்பப் புள்ளிவிபரவியலுக்கு ஏற்ப மேல் மாகாணத்தில் மாத்திரம் திருமணமானவர்களில் நூற்றுக்கு 54 பேர் விவாகரத்துக்காக நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளதாக, மேல் மாகாண சுகாதார தேசிய வைத்திய மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் ஜகத் அங்ககே தெரிவித்தார். தொடங்கொட பழைய பிரதேச சபைக் அலுவலக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட மகளிர் மற்றும் கூட்டுறவு ஆண்டுவிழாவின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டதாவது,

‘அவர்கள் சட்டத்திற்கேற்ப விவாகரத்துப் பெற்ற போதும், அந்தந்தக் குடும்பங்களிலுள்ள குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இலங்கையில் இறந்துபோவோரில் நூற்றுக்கு 70 வீதமானவர்கள் தொற்றா நோய்களினாலேயே இறக்கின்றனர். பெண்கள் பங்களிப்பு நல்கினால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்த இன்னுமுள்ளவர்களை மீட்டியெடுக்கலாம். மகளிர் கூட்டுறவுச் சங்கம் போன்ற இயக்கங்கள் மூலம் பெண்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்தக் காரியத்தைச் செய்யலாம். இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதில் மகளிர் கூட்டுறவுச் சங்கம் செயற்படுகின்றது என்பது உண்மை. இந்தச் செயற்பாட்டை களுத்துரை மாவட்டத்தில் எல்லாப் பிரிவுகளிலும் விரிவுபடுத்துமாறு செயற்குழுவினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com