கர்ப்பிணிப் பெண் புகைப்பிடித்தால் பேரப் பிள்ளைக்கும் பாதிப்பு
கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் சிகரெட் பிடித்தால் அவரின் பிள்ளைக்கு மட்டுமல்லாது பிள்ளைகளின் பிள்ளை அதாவது வருங்கால பேரக் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.இப்பாதிப்பு பிள்ளைகளின் மரபணு மூலமாக பேரக் குழந்தைகளுக்குப் பரவும் என அவர்கள் கூறுகின்றனர்.அதாவது சிகரெட் பிடிக்கும் கர்ப்பிணிகளின் வருங்காலப் பேரக் குழந்தைக்கும் ஆஸ்துமா போன்ற பரம்பரை வியாதிகள் தொற்றக் கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நிபுணர்கள் கருதுவது என்னவென்றால் கர்ப்பிணிகள் புகைப்பிடிக்கும் போது அது கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளின் மோசமான மரபணுக்களைத் தூண்டி விடுகின்றது. பின்னர் இந்தத் தூண்டுதல் அக்குழந்தையின் உள்ளேயே இருந்து அது வளர்ந்து பெரியாளாகி இன்னொரு குழந்தைக்கு தந்தையாகவோ தாயாகவோ மாறும் போது அவர்களின் குழந்தைகளுக்கு உள்ளேயும் செலுத்தப் படுகின்றது. இது பின்னாளில் குறித்த பெண்ணின் பேரக் குழந்தையைப் பாதிக்கும் நோயைக் கொண்டு வருகின்றது.
இதேவேளை புகை பிடிக்கும் ஆண்களின் வாரிசுகளுக்கு இவ்வாறான நோய்த் தொற்றுதல் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள Harbor-UCLA Medical Center ஐச் சேர்ந்த ஆய்வாளர்கள் பின்வரும் விளக்கத்தையும் தருகின்றனர்.
'அதாவது கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது' என்கின்றனர்.
0 comments :
Post a Comment