ஜனநாயகத்தை நிலை நிறுத்த ஜ.நாவின் விசேட குழு இலங்கையில் அமைக்கப்படவுள்ளது- ஜெனீவாவில் அரசிற்கு பொறி
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அப்பிரேரணையின் பிரதிகள் தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் திருத்தத்துக்கு உட்படுத்தும் வாய்ப்பு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள இராஜதந்திர தகவல்கள், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனையொன்றும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment