கோட்டை வியாபார நிலையங்களுக்குள் பொது பல சேனா!
கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள சில வியாபார நிலையங்களில் சிங்க உருவம் மாற்றியமைக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ள கொடிகளைத் தேடி அவை விற்பனை செய்யப்படாமலிருப்பதற்காக பொது பல சேனா இயக்கத்தினர் தேடுதல் வேட்டையை நேற்று மேறகொண்டதாக அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பொது பல சேனா இயக்கத்தினர் பீபல்ஸ்பார்க் சந்தைத் தொகுதியின் கீழ் மாடியிலுள்ள சில கடைகளிலேயே தேடுதல் நடத்தியுள்ளனர்.
இங்கு சிங்கத்தின் உரு மாற்றியமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற தேசிய கொடிகள் மொத்த விலைக்கு விற்பதனால் நாடெங்கிலும் இந்தத் தேசிய கொடிகள் செல்வதற்கு ஏதுவாகும் என வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் குறிப்பிட்டதாக இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான திலன்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு நாட்டின் தேசிய கொடி என்பது, அந்நாட்டின் அடையாளச் சின்னமாகும். அதற்கு உரிய முறையில் மதிப்பளிக்க வேண்டும். அது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளால் அல்லது மக்கள் அபிப்பிராயம் இன்றி தனியாருக்குத் தேவையான முறையில் அதனை மாற்றியமைக்க முடியாது. அதேபோல் இன்று நாடெங்கும் ஒரே அமைப்பிலேயே தேசிய கொடி காட்சியளிக்கிறது. மதிப்பளிக்காமல் நினைத்த வண்ணம் இதனை மாற்றியமைக்க முயற்சியில் பிறர் ஈடுபடாமலிருக்கும் வண்ணம் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
‘நாங்கள் ஜனாதிபதி உள்ளிட்ட பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேசிய கொடியை அச்சிடுவதற்கு, அதனை விற்பனை செய்வதற்கு ஒரு முறையை ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று அதனை சரியான முறையில் காட்சிப்படுத்துவதற்குப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.’ என்றும் திலன்த விதானகே தெளிவுறுத்தினார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment