Thursday, February 28, 2013

ஹலாலினால் தேடிய பணத்தை எதற்கு உபயோகித்தீர்கள்? நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள்!

சென்ற வருடம் ஹலால் சான்றிதழ் வழங்கி தேடிய வருமானம் பற்றியும், அந்தப் பணத்தைக் கொண்டு செய்தவை பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியுலகிற்கு அறிவிக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தாம் வலியுறுத்துவதாக ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் கேட்டுள்ளார்.

அறியாமையினால் ஹலால் வரி செலுத்திய சிங்கள, பௌத்தர்கள் ஹலால் சான்றிதழ்கள் வழங்கி தேடிய பணத்தினால் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதற்கு உரிமையுள்ளவர்கள் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமய முதல் இந்நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கள பௌத்த சங்கங்களும் ஹலாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் எனவும், தாம் மறுதளிப்பது ஹலாலை சக்தியாகக் கொண்டு அதனை எங்கள் தலைமேல் கட்ட முயல்வதையே என்று குறிப்பிட்டுள்ள தேரர், இலங்கையை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானாக மாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த நாடாகும் என்றும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக் காரணம் பௌத்தர்களின் உபசரிக்கும் மனப்பாங்கு என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com