இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது நியூசிலாந்து அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டில் நியூசிலாந்து அணி அபராமாக வெற்றி பெற்றுள்ளது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 258 ரன்னில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. டிராட் 68 ரன்னும், பெல் 64 ரன்னும் எடுத்தனர். மைக்கேல் மெக்கலசன் 4 விக்கெட்டும், பிராங்ளின் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 259 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக வில்லியம்சன் 74 ரன்னும், மேக்குல்லம் 69 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிநியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
0 comments :
Post a Comment