பயங்கரவாதி என்ற சொல்லுக்கு பாராளுமன்றம் கொடுத்த வியாக்கியானம்!!
இந்த சட்டமூலத்தில் குழு நிலை விவாதத்தின் போது பயங்கரவாதம் என்ற பதத்திற்கு வியாக்கியானம் அளிக்கக்கூடிய வகையில் திருத்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 5வது பிரிவின் 16A பகுதியில் பின்வருமாறு வியாக்கியானம் அளிக்கப்படுகிறது.
1. பயங்கரவாதி என்று அழைக்கப்படும் ஒருவருக்கு இந்த புதிய வியாக்கியானத்தை அளிக்கின்றோம்.
பயங்கரவாதி என்பது.
A. பயங்கரவாத செயற்பாடுகளை மறைமுகமாக அல்லது வேண்டுமென்றே செய்தல் அல்லது செய்ய முயற்சிகளை எடுத்தல்.
B. பயங்கரவாத குற்றச் செயல்களை செய்வதற்கு உடன்பட்டு உறுதுணை செய்தல்.
C. பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குகளை செய்தல், அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தல் அல்லது குற்றம் இழைப்பதற்கு உதவி உறுதுணை புரிதல்.
D. ஒரு பொதுக் குறிக்கோளுக்காக ஒரு குழு மேற்கொள்ளும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பங்களிப்பை அளித்தல். இந்த பங்களிப்பை ஒரு குறுகிய நோக்கத்துடன் செயற்படுத்தல். ஒரு செயற்பாட்டை குறிக்கோளாக வைத்து அதனை நடைமுறைப்படுத்தல்.
2. பயங்கரவாத நடவடிக்கை என்பதற்கான சட்ட வியாக்கியானம் பயங்கரவாத நடவடிக்கை என்பது.
A. இந்த சட்டத்தின் பின்னிணைப்பு ஒன்றில் உள்ள ஒப்பந்தத்திற்கு மாறாக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கை அல்லது,
B. பொது மக்கள் அல்லது வேறு எவருக்காவது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லது படுகாயப்படுத்த வேண்டுமென்றே குற்றம் இழைத்தல். அல்லது வேறு எவராவது வன்முறைகளுக்கு தீவிர பங்களிப்பை அளித்தல். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்லது அரசாங்கம் ஒன்றை அல்லது சர்வதேச அமைப்பொன்றை அச்சுறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.
C. நடவடிக்கை எடுத்தல் அல்லது நடவடிக்கை எடுப்போம் என்று அச்சுறுத்துதல். அரசாங்கத்தின் மீது அல்லது தனிப்பட்டவர்களையும், பொதுமக்களையும் பயமுறுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள். அரசியல் மத ரீதியிலான அல்லது சித்தார்த்த ரீதியிலான நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக.
இந்த நடவடிக்கைகள் யாவை?
AA. ஒருவருக்கு எதிரான பாரதூரமான வன்முறைகளை மேற்கொள்ளுதல்.
BB. இதனால் பொருட்களுக்கும் உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தல்.
CC. இந்த செயற்பாட்டின் போது இன்னொருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தல்.
DD. இவர்கள் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல்.
EE. திட்டமிட்ட முறையில் இலத்திரனியல் செயற்பாட்டை பாரதூரமான முறையில் சீர்குலைப்பதற்கான முயற்சி.
0 comments :
Post a Comment