காஷ்மீரை கைப்பற்ற அணு ஆயுத போர்: சயீத் மிரட்டல்!!
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் 'காஷ்மீர் ஒருமைப்பாடு தினம்' பேரணி நடந்தது. அதில் ஜமாத் உத்தவா தீவிரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சதிகாரனுமான ஹபீஸ் சயீத் கலந்து கொண்டு பேசினான். அப்போது, காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து விடுவித்து கைப்பற்ற “ஜிகாத்” என்ற புனித போரை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்காக அணு ஆயுத போர் தொடுக்க வேண்டும்.
அதற்கு ஜமாத்-உத்தவா இயக்கம் பாகிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக இருக்கும். காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் கொண்டு சென்று தீர்க்க வேண்டும். முஷ்ரப் தனது ஆட்சியின் போது காஷ்மீர் பிரச்சினையை தீவிரமாக கையாண்டார். அதன் பின்னர் ஏற்பட்ட மும்பை தாக்குதல் போன்ற பிரச்சினைகளால் காஷ்மீர் விவகாரத்தில் தொய்வு ஏற்பட்டது.
எனவே, அந்த விவகாரத்தில் அக்கறை காட்டாமல் இருந்தோம். காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க புனித போர் (ஜிகாத்) தான் ஒரே வழி. எனவே, இந்தியா வசம் உள்ள காஷ்மீரை அடைய ஜிகாத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றான்.
0 comments :
Post a Comment