பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய தடைசெய்யப்பட வேண்டும் - தினேஷ்
பொது பல சேனா இயக்கமும் சிங்கள ராவய இயக்கமும் இனவாதத்தை கட்டியெழுப்புவதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த இரண்டு இயக்கங்களும் இணைந்து எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை மகரகமையில் நடத்தவுள்ள ‘பொது பல மாநாட்டை’யும் தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு குறிப்பிடக் காரணம் ஞாயிற்றுக் கிழமை அவ்வாறு அந்த மாநாடு நடக்கும் பட்சத்தில் பிரச்சினைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளமையினாலாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எதுஎவ்வாறாயினும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தனவின் கருத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment