Monday, February 18, 2013

முறுகண்டி பிள்ளையாருக்கு நேர்ந்த கதி!!

ஏ-9 வீதியில் அமைந்துள்ள திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலய சூழலில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் உரியமுறையில் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவதால் இங்கு தேங்கி கிடக்கும் குப்பைககளை கட்டாக்காலி கால்நடைகள் கிளறி சின்னாப் பின்னப்படுத்துவதால் அப்பகுதியின் புனிதத் தன்மை சீர்கெடுவதாக பொதுமக்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொள்வோர் இவ்வாலயப் பகுதியில் சற்று இளைப்பாறிச் செல்லும் நிலையில் இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் எஞ்சிய உணவுப் பொருட்கள், பொலித்தீன் பைகள், வெற்றுசோடாப் போத்தல்கள் என்பவற்றை குப்பைத் தொட்டிகளில் போட்டு விட்டு செல்கின்றனர்.இந்நிலையில் இவ்வாறு குப்பைத்தொட்டியில் தேங்கிக் கிடக்கும் கழிவுப்பொருட்களை ஆலய நிர்வாகத்தினர் உரிய வகையில் அப்புறப்படுத்தினால் இவ்வாறான சுகாதார சீர் கேடுகள் ஏற்படுவதைத்தவிர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகள் குப்பைகளை கிளறுவதால் பொலித்தீன்பைகள், சோடாப் போத்தல்கள் காற்றுடன் பறந்து வீதியில் கிடப்பதுடன் பறவைகளும் இவற்றை இழுத்து செல்கின்றன.

இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கும் மக்கள் இவ்வாலய சூழலின் புனித்தன்மையை கருத்தில் கொண்டு உரியவர்கள் குப்பைகளை உரியவகையில் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

2 comments :

Anonymous ,  February 19, 2013 at 3:01 PM  

It is a simple matter to keep the place clean,the local authorites who
cover this place have to engage cleaners to wipe out the thrash.It is their duty..Cleanliness is next to Godliness.Hope the authorites belongs to this area are fast asleep or they may be feeling the breeze of the thrash

Anonymous ,  February 20, 2013 at 10:30 AM  

What the temple maintenance committee
is doing ?.What they do with the till collection.They should make use of the common sense to clean the sorroundings of the spiritual place.
They should not wait until the dirty sorroundings of the temple flashed out in the papers.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com