ஈரானுக்கு ஒரு தடவை வந்துதான் பாருங்களேன்...
பொது பல சேனாவுக்கு அழைப்பு!
‘ஈரானில் மாற்று மதங்களுக்கு அளிக்கப்படுகின்ற மரியாதைகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஈரானுக்கு ஒருமுறை வந்து செல்லுமாறு ஈரானிய அரசு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை பொது பல சேனாவுக்கு விடுத்துள்ளது.
இன்று காலை பொது பல சேனாவின் தலைமையகத்துக்குச்சென்ற இலங்கையின் ஈரான் தூதுவர் கலாநிதி எம்.என். ஹஸானி போ இந்த வேண்டுகோளை இயக்கத்தினரிடம் விடுத்துள்ளார்.
ஈரானிய அரசு பௌத்த சிலைகளை தடைசெய்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் சொல்வதில் எந்த உண்மையும் கிடையாது என்பதை தெளிவுறுத்திய தூதுவர் ஹஸானி, பௌத்த சிலைகள் ஓர் ஒழுங்கமைப்பின்றி அங்குமிங்கும் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து அதற்குரிய மரியாதைகளுடன் விற்பனை செய்யப்பட வேண்டுமென்றே அரசு அவ்வாறான வேண்டுகோள் ஒன்றை விடுதத்து என்றும் அவர் தெளிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, பொது பல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் மற்றும் அந்த இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான திலந்த விதானகேயும் கலந்துகொண்டனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment