ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் கைகோர்த்துச் செயற்பட்டால் விரைவில் இலங்கை அபிவிருத்தி அடையும்-பிரதமர்!
தேசிய சுதந்திர தினமான இன்று நாம் அனைவரும் தாய் நாட்டின் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார முன்நேற்றத்திற்காக ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் கைகோர்த்துச் செயற்படுவதற்கு உறுதி பூணுவோம்” இவ்வாறு பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது செய்தியில் இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைக்கப்பெற்று 65 ஆண்டுகள் பூர்த்தியாகும். 2013, பெப்ரவரி மாதம் 04ஆம் திகதியானது. இலங்கையர்களான எம் அனைவரினதும் உள்ளங்களைப் பூரிப்படையச் செய்யும் அதிர்ஷ்டம் மிக்க தினமாகும். வெளிநாட்டு ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து மீண்டு இறைமையாண்மை மிக்க நாடகத் தோற்றம் பெற்றது. முதல் இன்று வரை கடந்த 6 1/2 தசாப்த காலத்தினுள் இலங்கையானது பாராட்டத்தக்க வகையில் சமூக, பொருளாதார, கல்வி, கலாசார ரீதியாக முன்னேறியுள்ளதைக் காணலாம்.
இந்தக் காலத்தினுள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு மத்தியிலும் கூட வெற்றிப் பாதையினுள் பிரவேசிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டிலின் கீழ் மூன்று தசாப்தங்களாக எம்மை ஆட்கொண்டிருந்த எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதத்திடம் இருந்து இந்த நாடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிப்பிற்குட்பட்டிருந்த வடக்கு, கிழக்குப் பிரதேச மக்களின் வாழ்க்கையினை முன்பிருந்தவாறு இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு தற்போதைய அரசாங்கமானது.
பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டு வசதிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களை மீள்குடியேற்றி அழிவுக்குட்பட்ட பாதைகள், மின்சார வசதிகள், பாடசாலை வசதிகள் என்பன மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் பெற்றுக் கொண்டுள்ள சமூக, பொருளாதார, கல்வி, கலாசார ரீதியான முன்னேற்றத்தினை அப்பிரதேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், உலக வங்கி மற்றும் ஆசிய வங்கிப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் “கமநெகும” (கிராம எழுச்சி) “கெமிதிரிய” (கிராம ஊக்கம்) “திவிநெகும” (வாழ்வெழுச்சி) போன்ற செயற்றிட்டங்களினூடாக பொதுமக்களின் பொருளாதாரமானது வளர்ச்சியடைந்து கொண்டிப்பதனைக் காணலாம். முன்னெப்பொழுதும் இல்லாதவாறு நாட்டிலுள்ள சகல கிராமங்களையும் நகரத்துடன் இணைக்கும் வகையில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பிரதான நகரங்களில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய கட்டிடங்கள், பாரிய ஹோட்டல்கள், பாரிய சந்தைத்தொகுதிகள் என்பன நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதனைக் காணலாம். நாட்டில் நிலவும் சமாதான சூழலானது பலம்மிக்க பொருளாதாரம் மற்றும் அதன் ஸ்திரத்தன்மைக்குக் காரணமாக இருக்கின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை, பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு என்பனவற்றை இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை எடுத்தியம்புவதற்கான சிறந்த சாட்சிகளாகக் கொள்ள முடியும்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத்துறைமுக அபிவிருத்திச் செயற்றிட்டம், தெற்கு அதிவேகப் பாதை, நுரைச்சோலை அனல் மின்நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம், கொழும்பு- கட்டுநாயக்க அதிவேகப் பாதை போன்ற பாரிய செயற்திட்டங்கள் நாட்டின் சக்திமிக்க பொருளாதாரத்தை எடுத்தியம்புகின்றன.
0 comments :
Post a Comment