புதுடில்லி மருத்துவ மாணவி மரணம் குறித்த விசாரணை மீண்டும் ஆரம்பம்!
கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்த சம்பவம் தொடர்பான 5 சந்தேகத்திற்குரிய நகர்களும் இன்று விசேட நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர்களிடம் மேற்கொளளப்பட்ட விசாரணையின் போது இவர்கள் 5 போரும் தம்மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளதுடன் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் ஈடுபட்ட்தாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகத்திற்குரிய ஒருவர் வயது குறைந்தவர் எனபதால் இவர் மீதான நீதி மன்ற விசாரணைகள் டில்லி சிறுவர் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற விசேட நீதிமன்ற விசாரணையின் போது ஊடகவியலாளரகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
0 comments :
Post a Comment