யாழ் பல்கலை மாணவர்கள் விடுதலை!
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டுக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இன்று(13.02.2013)காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் சிலவற்றுடனும் புலி(LTTE) ஆதரவு செயற்பாட்டுடனும் தொடர்புபட்டிருந்தமை தொடர்பாக தெரியவந்ததை தொடர்ந்து நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய இரண்டு மாணவர்களுக்கும் வவுனியா - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்ததாக பிரிகேடியர் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதால் அவர்களது நலனை கருத்திற்கொண்டும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லாது புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்று புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரு மாணவர்களுடைய பெற்றோரும் நேற்று(12.02.2013) யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கயுடைய பிள்ளைகளை விடுதலை செய்து பல்கலை கல்வியை தொடர அனுமதிக்குமாறு வேண்டியதை உடனடியாக கருத்தில் எடுத்த ஜனாதிபதி நாளைய தினம் காலை விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதி வளங்கினார்.
இன்று காலை யாழ் போதனாவைவத்திய சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய 3 மாடி கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது உங்களுடைய இரண்டு பிள்ளைகளும் தற்போது விடுதலை செய்யப்ப்டுள்ளதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment