Tuesday, February 26, 2013

மன்னார் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்

மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட விவசாயிகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இவ் உண்ணாவிரதப் போராட்டம் முருங்கன் செம்மண் தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நிர்ணயித்த விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக்கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.இதில் பெண்கள் ஆண்கள் எனப் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com