பௌத்த பிக்கு குத்திக் கொலை,நகர சபை பிரதிமேயர் பொலிஸாரால் கைது
மொறட்டுவைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மொறட்டுவை சுனந்தோபன்ராமான்யபதி மெடிகஹதென்னே விமலவங்ச தேரரரே குத்தி கொலைச்செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் காணி தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்மொறட்டுவை, எகடஉயன பகுதியிலுள்ள விஹாரையின் பிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறைந்தது 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை செய்து வருவதாகவும் கல்கிஸை பொலிஸ் விசேட விசாரணை குழு தெரிவித்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மொறட்டுவை நகர சபையின் பிரதி மேயரை (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 comments :
It is sorrowful to hear the devotion respect and sicererity to religions are declining.This might lead to greater disasters in future.
so prevention is better than cure
Post a Comment