நயீனாதீவிற்கு புதிய இறங்குதுறை, ஜனாதிபதி திறந்து வைத்தார்.
வடக்கின் வசந்தம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 4.5 கோடி ரூபா செலவில் நயீனாதீவில் அமைக்கப்பட்ட புதிய இறங்கு துறையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நயீனாதீவிற்கு மாலை விஜயம் செய்தார்.
இதன்போதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய, யாழ்.கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.
0 comments :
Post a Comment