எங்களை கொல்லுங்கள் சிறைச்சாலையின் கூரையில் நின்று விநோத போராட்டம் நடத்திய கைதிகள்.
கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் மூவர்; தமக்கான மரண தண்டனையை விரைவில் அமுல்படுத்துமாறு கோரி சிறைச்சாலை கூரையின் மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தது அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது மரண தண்டனை இல்லை என்று தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை சமரசம் செய்து கூரையில் இருந்து இறக்கி மீண்டும் சிறைகளுக்கு அவர்களைக் கொண்டு சென்றனர்.
கைதிகளின் இவ்வினோதமான சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கைதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளது.
0 comments :
Post a Comment