இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு நாளை பதிலளிப்பாராம் சமரசிங்கா!
நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபiயின் 22 வவது மனித உரிமை மாநாட்டில் இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படுன்றது இந்நிலையில் இலங்கைமீது முன்வைக்கப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாளை உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் 22வது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் ஐக்கிய மனித உரிமை ஆணைக்குழவின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, இலங்கை மீது மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
நவநீதம் பிள்ளையின் இச்செயற்பாட்டு இலங்கை சுயாதீன தொலைக்காட்டி வன்மையாக விசமர்சனம் செய்துள்ளது. அதன் செய்தியில், அமெரிக்கா உள்ளிட்ட பலம்பொருந்திய நாடுகள், இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, பிரேரணையை நிறைவேற்றுவதற்கே, முயற்சிக்கிறது என்றும் இவர்களது குறுகிய நோக்கங்களை எட்டும் வகையிலேயே, நவநீதம்பிள்ளை செயற்பாட்டில் இறங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகளை போன்று, மனித உரிமை அமைப்புகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ஒரு சில அமைப்புகளும், இலங்கைக்கு எதிராக போலி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன எனவும் ஈராக்கில் நிலவிய அமைதியினை சீர்குலைத்து, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சதாம் ஹூஸைன் தூக்கிலிடப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக எதுவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் லிபியாவை அழித்து, முஅம்மர் கடாபி மிலேச்சத்தனமான முறையில் கொலை செய்யும்போது, முழு உலகமும் அதனை பார்த்துக்கொண்டிருந்தது என்றும் அல் கைதா தலைவர் ஒஸாமா பின் லாடன், நிராயுதபாணியாக இருந்தவேளை, கொலை செய்யப்பட்டார் என்றும் சிரியா மற்றும் மாலி ராச்சியங்களிலும் இவர்கள் யுத்தத்தை தூண்டியது மாத்திரமன்றி, அங்கும் பாரிய அட்டகாசங்களை புரிந்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ள சுயாதீனத் தொலைக்காட்சி மேற்படி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , எந்தவொரு மனித உரிமை அமைப்பும், அமெரிக்கா மீது குற்றம் சாட்டவில்லை என்றும் 30 ஆண்டுகால பயங்கரவாதத்தினால் வரையறையற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட இலங்கை மக்களை அதிலிருந்து மீடடெடுப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட மனித மனிதாபிமான நடவடிக்கைக்கு மனித உரிமை மீறல் என நாமம் சூட்ட முனைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் ஊடாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர் என்று தெரிவிக்கும் சுயாதீனத் தொலைக்காட்டி இந்நடவடிக்கை எவ்வாறு மனித உரிமை மீறலாக அமைய முடியுமென, கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் சுயாதீனத் தொலைக்காட்சியின் செய்தியில் அன்று போல், இன்று இலங்கையில் எங்கும் குண்டுவெடிப்பதில்லை., கிராமங்களில் ஊடுறுவி பொது மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையூடாக மீடு;டெடுக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அச்சமின்றி, சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகளும், பாதுகாக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களின் சிறார்கள், இன்று சுதந்திரமாக கல்வி கற்கின்றனர். வடபுல இளைஞர் யுவதிகளுக்கு, பட்டதாரி நியமனங்கள் கூட, வழங்கப்பட்டுள்ளன.
பாலங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன், சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வங்கிக்கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. வடபுல மீன்பிடி கைத்தொழிலுக்கு அரசாங்கம் உயரிய வசதிகளை வழங்கியுள்ளது.
மக்களுக்கு சுதந்திரமாக தமது சமயத்தை பின்பற்றக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அரசிற்கு எதிராக, விமர்சனங்களை தெரிவிப்பதற்கு ஊடகங்களுக்கு கூட, சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை. அன்று போல் இன்று ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதில்லை.
இந்நிலையில் போலி அடிப்படையற்ற கருத்துகளை முன்வைத்து, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கூறுவது, நியாயமற்ற செயற்பாடாகும். இலங்கை அரசிற்கு எதிராக ஒரு சில நாடுகள் முன்னெடுத்துள்ள போலி பிரச்சாரங்கள், அடிப்படையற்றவையாகும். அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையின் உண்மையான நிலைமைகள் தொடர்பாக, மனித உரிமை மாநாட்டில், நாளை உரையாற்றவுள்ளாராம்.
0 comments :
Post a Comment