கொள்ளையடிப்பதற்கு ஹிஜாப் உடை, வசமாகச் சிக்கினார் இராணுவ அதிகாரி!
கண்டி தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கொள்ளையடிப்பதற்காகச் சென்றவர் என்று சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரியொருவரை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்ணொருவர் போல ஹிஜாப் உடையணிந்து, விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் கொள்ளையிடச் சென்றிருந்த சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரி என்று இனங்காணப்பட்டுள்ள சந்தேக நபர், கொத்மலையில் பணியாற்றுபவர் என்பதும் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment