அலுக்கோசுகளுக்கு பயிற்சி ஆரம்பமாகவுள்ளது.
பணிக்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு அலுகோசுக்கான (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவர்களுக்கான முதல் 14 நாட்கள் பயிற்சி வெலிக்கடை சிறையிலுள்ள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து வெலிக்கடை மற்றும் போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையில் 1976 ஆம் ஆண்டிற்கு பின்னர்; தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததால் தூக்குத் தண்டனை நிறைவேற்றுநருக்கான அவசியம் இருக்கவில்லை.
இதேவேளை இலங்கையில் இறுதியாக 1976 ஆம் ஆண்டு தங்காலையைச் சேர்ந்த சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
0 comments :
Post a Comment