மனைவியின் கவர்ச்சி ஆடையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் !
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னுடைய மனைவியின் ஆடையால் பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.
பதவியேற்பு விழாவில் நேதன் யாகுவின் மனைவி சாராவும் (வயது 54) கலந்து கொண்டார்.
அப்போது, அவர் மெல்லிய சல்லடை துணி போன்று உள்ளாடைகள் தெரியும் வகையில் கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தார்.
இதை இஸ்ரேல் நாட்டு பத்திரிகைகள் விமர்சித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த வயதிலும் அவர் அமெரிக்க நடிகையும், பாப் பாடகியுமான பியர்னஸ் போன்று உடை அணிந்துள்ளது சகிக்க முடியவில்லை என பத்திரிகைகளில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. லிவ்நாட் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆடை அலங்கார விஷயத்தில் பிரதமர் மனைவி என்பதால் அதை அரசியலாக கூடாது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment