Saturday, February 23, 2013

ரணிலை ஜனாதிபதியாக ஆக்கிப் பாருங்கள் சாரைப்பாம்பா? புடையன்பாம்பா? என தெரியும்!!

மன்னர் சபைக்கு வந்த நெசவாளி ஒருவன் அறிஞர்களுக்கும் நல்லவர்களுக்குமே நான் கொண்டு வந்துள்ள ஆடை தெரியும் எனக் கூறுகிறான். இரண்டு கைகளையும் உயர்த்தி இதோ! எனது கரத்தில் இருக்கும் இந்த ஆடைமன்னர் பெரு மானுக்கு மிகவும் பொருத்துடையது என்கிறான். அவனின் கையில் எந்த ஆடையுமில்லையாயினும் அறிஞர்களுக்கும் நல்வர்களுக்குமே குறித்த ஆடை தெரியும் என்று நெசவாளி கூறிய தால் சபையிலிருந்த மன்னன் முதல் மந்திரி பிரதானிகள் வரை அனைவரும் நெசவாளி கொண்டு வந்த ஆடை மிகவும் அற்புதமானதென்றனர்.

இப்போது, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிக்கப் போவதாக அவன் கூற, மன்னன் தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து கொள்கிறான். அதோ! மன்னன் நிர்வாணமாக நிற்கிறான். நெசவாளி, தான் கொண்டுவந்த ஆடையை மன்னனுக்கு அணிவிப்பது போலபாவனை செய்கிறான். ஆடையிருந்தால் தானே அம்மணம் மறைக்கப்படும். மன்னன் நிர்வாணமாக நிற்பதை அனைவரும் உணர்ந்தாலும் அறிஞர்களுக்கும் நல்லவர்களுக்குமே ஆடை தெரியும் என்று நெசவாளி கூறியிருந்தமையால் மன்னா... மா மன்னா. ஆடை பிரமாதம் என்றனர் சபையோர். இப்போது மன்னன் நாட்டை சுற்றிவருகிறார். அனைவருக்கும் மன்னன் நிர்வாணமாக நிற்பது தெரியினும் யாரும் எதுவும் பேசிலர்.

அச்சமயம் சிறுவன் ஒருவன் மட்டுமே ஆஹா... கூக்கூ... எங்கள் மன்னன் நிர்வாண மாய் போகிறார் சீ... சீ... என்றான். அந்தச் சிறு வன் கூறிய போதுதான் அனைவரும் தங்களுக்குத் தெரிந்ததை வெளிப்படுத்தினர். நெசவாளி ஏமாற்றி விட்டான் என்பதையும் உணர்ந்து கொண்டனர். இத்தகைய நிலைமைகள் வெறும் கதைகளாகமட்டுமல்ல; யதார்த்தங்களாகவும் இருக்கவே செய்கின்றன. இந்தயதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில் தமிழர்களாகிய எங்களிடம் மிகப்பெரும் பல வீனம் உண்டென்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றரணில் விக்கிரமசிங்க எங்களுக்காகப் பேசுவதெல்லாம் எதிர்க்கட்சியில் இருக்கும் வரைக்கும்தான்.

அவரை ஒருமுறை ஜனாதிபதியாக்கிப் பாருங்கள். அவரும் இந்த நாட்டின் கடந்தகால - நிகழ் கால ஜனாதிபதியின் இயல்பை இம்மியும் பிசகாமல் பின்பற்றுவார். உதாரணத்திற்கு அரசியலில் இணையாத போது இருந்த சந்திரிகாவும் எதிர்க்கட்சியில் இருந்த சந்திரிகாவும் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் தமிழர்களின் விடயத்தில் வெவ்வேறு கோணங்களை - கொள்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலைமை சிங்களவர்கள் அனை வருக்கும் பொருத்துடையதே. அந்தவகையில் ரணில் கூறுகின்ற நியாயங்கள் என்பது பதவி இல்லாததால் எழுந்த சாரைத்தனம். அவரை ஜனாதிபதியாக்கினால் அவர்சாரையா? புடையனா என்பது தெரியவரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com