Tuesday, February 5, 2013

ஈரானில் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரின் விரல்கள் இயந்திரத்தில் வெட்டப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகின.

திருட்டு மற்றும் முறைகேடான பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரொருவரின் விரல்கள் விசேட வெட்டும் உபகரணமொன்றின் மூலம் துண்டிக்கப்படும் கொடீர காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேற்படி நபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், விரல்களை வெட்டும் இயந்திரத்துக்கு அருகே அழைத்து வரப்பட்டு அவரது கரம் இயந்திரத்தின் வெட்டுப் பகுதியில் வைக்கப்பட்டு விரல்கள் துண்டிக்கப்படும்.

காட்சியை மேற்படி புகைப்படங்கள் விபரிகின்றன.ஈரானில் நபரொருவருக்கு விரல்களை வெட்டித்தண்டனை: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்
ஆனால், தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான நபர் எதுவித வலியுணர்வையும் வெளிப்படுத்தாது அமைதியுடன் காணப்பட்டுள்ளார்.
அவருக்வலியுணர்வை மரத்துப் போகச் செய்யும் மருந்து வழங்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த வாரம் ஈரானின் தென் மேற்கு நகரான ஷிராஸிலுள்ள நீதிமன்றமொன்றில் நிறுத்தப்பட்ட போது, அவர் திருட்டு மற்றும் திருமணத்துக்கு அப்பாலான உறவு ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக இணங்காணப்பட்டார்.




2 comments :

Anonymous ,  February 5, 2013 at 7:25 PM  

It is ugly to watch ,reminding the bad oldest days punishments

Anonymous ,  February 6, 2013 at 4:02 PM  

Darwin's theory proves the evolution as gradual developments and changes.So why you remain in the stone age...?The world always prefer evolution to revolution.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com