இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்களுக்கு வீட்டு திட்டம்
அண்மையில் கிளிநொச்ச்சியிலிருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது சுதந்திர தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை கிளிநொச்சி பிரதேச பொலிஸ் அத்தியட்சர் செல்வம் மற்றும் 571ஆவது படையணியின் தளபதி கேணல் அமரசேகர ஆகியோர் நாட்டிவைத்தனர்.
65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் பிரிவிலேயே இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வீட்டுத் திட்டத்திற்கான பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment