வெற்றிகரமாக சமயவழிபாடுகளில் ஈடுபட்டார் மகிந்த, திடீரென்று டில்லி விஜயம் ரத்து?
இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக தனது பயணத்தை இந்தியாவில் முடிந்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று முற்பகல் இந்தியா சென்ற முதலில் மதவழிபாடுகளில் ஈடுபட்டார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தினர் சகிதம் புத்தகாயாவிற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் புதல்வர்களான யோசித்த மற்றும் ரோகித்த ஆகியோர் இவ் இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை ஜனாதிபதியின் டில்லி விஜயம் ரத்துச் செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதி, முதலில் புதுடில்லி சென்று அங்கு இந்திய அரசியல் முக்கியஸ்தர்களைச் சந்தித்த பின்னர், புத்தகாயாவுக்கும் அதன்பின்னர் திருப்பதிக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவர் முதலாவதாக புத்தகாயாவிற்கு சென்றார்.
1 comments :
There are very important religious places in Srilanka,according to Mahawamsa Lord Buddha visited Srilanka Kelaniya and kelaniya Vihare are to be reminded.SaintMonk Mahinda met King Tissa at Mihintale.Kandyan temple and the toothrelic.Kataragama,Sripada.Anuradhapura.How many spirituality places we have in our holy Srilanka.We need not go far in search of spiritual blessings,whereas we have holy devotional spiritual places in our country.
Post a Comment