Wednesday, February 13, 2013

தடைகளை உடைத்துக்கொண்டு யாழ்தேவி காங்கேசன்துறை வரும்

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புகையிரதவீதி காங்கேசன்துறை வரை செல்லும் இதற்கு முட்டுக்கட்டையாக எத்தகைய தடைகள் வந்தாலும் அத்தகைய அனைத்து தடைகளையும் உடைத்துக்கொண்டு யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறை வரைக்கும் நடாத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று(12.02.2012)யாழில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலி. வடக்குப் பகுதிக்கூடாகச் செல்லும் புகையிரதப் பாதையினை குறுக்கறுத்து பாதுகாப்பு வேலிகளும் அரண்களும் காணப்படுகின்றன. இதனால் புகைவண்டி காங்கேசன்துறைக்கு வருமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக சுகிர்தன் ஜனாதியிடம் தெரிவித்தார்.

இதற்குச் சற்றும் தாமதிக்காமல் எத்தகைய தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் உடைத்துக்கொண்டு யாழ்தேவி காங்கேசன்துறை வரை பயணிக்கும் என்று ஜனாதிபதி கூறியபோது மாநாட்டு மண்டபத்தில் பலத்த கரகோஷ ஒலி எழுந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com